காதியில் குழந்தைகள் ஆடை, கைவினை காகித காலணிகள்: மத்திய அமைச்சர்கள் அறிமுகம்..!

இந்தியா

காதியில் குழந்தைகள் ஆடை, கைவினை காகித காலணிகள்: மத்திய அமைச்சர்கள் அறிமுகம்..!

காதியில் குழந்தைகள் ஆடை, கைவினை காகித காலணிகள்: மத்திய அமைச்சர்கள் அறிமுகம்..!

காதியின் இரண்டு புதிய பொருட்களான பருத்தியிலான காதி குழந்தைகள் ஆடை மற்றும் தனித்துவம் வாய்ந்த காதி கைவினை காகித காலணிகளை புதுதில்லியில் உள்ள காதி வளாகத்தில் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நாராயண் ரானே இன்று அறிமுகப்படுத்தினார்.

இதில் இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா ஆகியோரும் அப்போது உடனிருந்தனர். காதியின் பல்வேறு பொருட்களை இரண்டு அமைச்சர்களும் பாராட்டினார்கள்.


முதற்கட்டமாக, பிறந்த குழந்தைகள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆடைகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 100% கைகளால் செய்யப்பட்ட மென்மையான பருத்தி துணியில் குழந்தைகளின் மேனியில் ஒவ்வாமை ஏதும் ஏற்படாத வகையில் இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒருமுறை பயன்படுத்தப்படும் கைவினைக் காகித காலணிகளையும் காதி நிறுவனம் உருவாக்கியுள்ளது. 100% சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மலிவான விலையிலும் இந்த காலணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பருத்தி மற்றும் பட்டு கந்தல்கள் மற்றும் வேளாண் கழிவுகள் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து இந்தக் காகிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. எடை குறைவான இந்த காலணிகளை பயணத்தின்போதும், வீடுகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.

இயற்கைக்கு உகந்த மற்றும் நிலையான பொருட்களின் சந்தையை அதிகப்படுத்துமாறு அமைச்சர் திரு ரானே வலியுறுத்தினார். இந்தத் துறையில் பெரும் சந்தையை ஈட்டுவதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளையும் நுகர்வோர்களையும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உருவாக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave your comments here...