மருத்துவ வசதி கேட்டு கிராம மக்கள் போராட முடிவு..!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

மருத்துவ வசதி கேட்டு கிராம மக்கள் போராட முடிவு..!

மருத்துவ வசதி கேட்டு கிராம மக்கள் போராட முடிவு..!

சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில் மருத்துவ வசதி கேட்டு கிராமமக்கள் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

முதலைக்குளம் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதியில் சுமார் 7,000 பேர் வசித்து வருகின்றனர் இங்குள்ள கிராமமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு இங்கு அம்மாமினிகிளினிக் தொடங்கப்பட்டு மருத்துவர் செவிலியர் மற்றும் உதவியாளர் உள்பட 3 பேர் இங்கு பணியாற்றினார்.

ஆனால் தற்போது மூன்று மாத காலமாக அம்மாமினிகிளினிக் செயல்படாததால் இப்பகுதி கிராமமக்கள் மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இங்கு மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் அம்மாமினிகிளினிக் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் இப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்

இதுகுறித்து தமிழரசன் என்பவர் கூறும்போது:- எங்கள் முதலைக்குளம் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கடந்த ஆண்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு இதில் அம்மாமினிகிளினிக் கடந்த ஆறு மாதம் முன்பாக திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது இரண்டு மாத காலமாக அம்மா மினி கிளினிக் செயல்படாமல் உள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மருத்துவ வசதி கேட்டு மனு செய்து உள்ளோம்.இதுவரை அம்மாமினிகிளினிக் திறக்க ஏற்பாடு செய்ததாக தெரியவில்லை ஆகையால் போராட முடிவு செய்து உள்ளோம் என்று கூறினார்

இது குறித்து பாசன விவசாய சங்க தலைவர எம்.பி.ராமன் கூறுகையில் கிராம மக்களுக்கு அடிப்படை தேவையான மருத்துவ வசதி இங்கு இல்லை.இதனால் இங்குள்ள மக்கள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மருத்துவ வசதி பெற்று வருகின்றனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையாக மனு கொடுத்துள்ளேன். அவரும் விரைவில் நடவடிக்கை எடுத்து இங்கு இயங்கி வந்த அம்மாமினிகிளினிக் திறக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

இது குறித்து செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தெளக்பிக்்அகமது அவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது வருகின்ற வியாழக்கிழமை முதல் முதலைக்குளம் அம்மாமினி கிளினிக் மீண்டும் செயல்பட ஏற்பாடு செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

செய்தி : RaviChandraN

Leave your comments here...