வீட்டில் சர்ச்…. பிரார்த்தனை பெயரில் விபசாரம் : கிறிஸ்துவ போதகர் உட்பட 5பேர் கைது.!

தமிழகம்

வீட்டில் சர்ச்…. பிரார்த்தனை பெயரில் விபசாரம் : கிறிஸ்துவ போதகர் உட்பட 5பேர் கைது.!

வீட்டில் சர்ச்…. பிரார்த்தனை பெயரில் விபசாரம் :  கிறிஸ்துவ போதகர் உட்பட 5பேர் கைது.!

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்தவர் லால் ஷைன் சிங் (வயது 43). இவர் தன்னை மத போதகர் என அடையாளப்படுத்தி கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜெபக்கூடம் நடத்தி வந்தார். அந்த வீட்டிற்கு அடிக்கடி இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து சென்றனர். 

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்த போது, ஜெபக்கூடம் போர்வையில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து சம்பவத்தன்று நித்திரவிளை போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.அப்போது அங்கு 2 ஆண்கள், 4 பெண்களுடன் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் 6 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அந்த 6 பேருடன், வீட்டின் உரிமையாளர் ஷைன் லால் சிங்கையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 

அப்போது பெண்களுடன் இருந்தவர்கள் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஷைன் (34), சிபின் (34) என்பது தெரிய வந்தது. மேலும் பிடிபட்ட 4 பெண்களில் 2 பேர் 40 மற்றும் 55 வயதுடையவர்கள் என்பதும், மற்ற 2 பேர் 19 வயதுடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. 

மேலும் பிடிபட்ட பெண்களில் 2 பேர் தாயும், மகளும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. வறுமை காரணமாக பெற்ற மகளையே தாய் விபசாரத்தில் ஈடுபடுத்தியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. 

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போதகர் லால் ஷைன் சிங், ஷைன், சிபின் மற்றும் 40, 55 வயதுடைய 2 பெண்கள் என 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 19 வயதுடைய 2 இளம் பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave your comments here...