முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு..!

இந்தியா

முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு..!

முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு..!

குமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் பாறசாலையை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

கடந்த மாதம் 28-ந்தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 7-ந்தேதி குழந்தையும் பிறந்தது.தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதை மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று தெரிவித்தார்.

கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...