1.66 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளது – மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியா

1.66 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளது – மத்திய சுகாதார அமைச்சகம்

1.66 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளது – மத்திய சுகாதார அமைச்சகம்

மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் மக்களுக்கு செலுத்துவதற்காக இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 37.07 கோடி தடுப்பூசிகளை வழங்கி உள்ளது.

இதில், 35 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 197 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.

இந்த நிலையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மேலும் 23 லட்சத்து 80 ஆயிரம் டோஸ் தடுப்பூசியை வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது.இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Leave your comments here...