திமுக இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஈஷா அமைப்பு.!

தமிழகம்

திமுக இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஈஷா அமைப்பு.!

திமுக இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஈஷா அமைப்பு.!

தி.மு.க இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஈஷா அமைப்பு.

ஈஷா சார்பில் 300 உயர்தர BiPAP non-invasive ventilators மற்றும் 18 லட்சம் KN 95 முக கவசங்கள் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சென்னையில் நேற்று (ஜூலை 6) வழங்கப்பட்டது. தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக செயல்படும் விதமாக இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தடுப்பு பணிகளுக்காக, 300 BiPAP non invasive ventilators மற்றும் 18 லட்சம் KN-95 முகக்கவசங்களை Isha Outreach – Covid Action சார்பில் நட்சத்திரா, தினேஷ் ராஜா ஆகியோர் இன்று என்னிடம் வழங்கினர். நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு, இதேபோல் கடந்த மே மாதம், 500 Oxygen Concentrators, பி.பி.இ கிட்கள் மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.

இது தவிர்த்து, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், கொரோனா நிவாரணப் பணிகளை ஈஷா நேரடியாக செய்து வருகிறது. கோவையில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது மற்றும் மருத்துவம், சுகாதாரம், காவல்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன் களப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மின் மயானங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இலவசமாக தகனம் செய்யப்படுகிறது.

அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ‘சிம்ம க்ரியா’ போன்ற எளிய யோகா பயிற்சிகளை உலகில் உள்ள பல லட்சம் மக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

Leave your comments here...