புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் 11 முதல் 13-ந்தேதி வரை 144 தடை.!

ஆன்மிகம்இந்தியா

புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் 11 முதல் 13-ந்தேதி வரை 144 தடை.!

புரி ஜெகநாதர்  கோவில் ரத யாத்திரை  செல்லும் பகுதிகளில் 11 முதல் 13-ந்தேதி வரை 144 தடை.!

ஒடிசாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை, வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் தடையை மீறி பக்தர்கள் பங்கேற்காமல் இருப்பதற்காக, ரத யாத்திரை செல்லும் கிராண்ட் சாலையில் 144 தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகிற 11-ந்தேதி இரவு முதல் 13-ந்தேதி காலை வரை இந்த தடை அமல்படுத்த கோவில் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.

இதைப்போல கிராண்ட் சாலையை இணைக்கும் பிற சாலைகளுக்கும் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் யாத்திரை செல்லும் பகுதிகளில் சாலையின் இருபுறமும் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பக்தர்கள் இந்த யாத்திரையை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற 3 தேர்களையும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையாளர்கள் இழுத்து செல்வார்கள் எனவும், இதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த சேவையாளர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave your comments here...