கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்.!

இந்தியா

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்.!

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்.!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்:-

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்படுகிறது. கோவின் தளத்தில் பதிவு செய்த பின்னர் அல்லது அருகிலுள்ள தடுப்பூசி முகாம்களுக்கு நேரில் சென்று பதிவு செய்த பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நெறிமுறைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியால் கர்ப்பிணி பெண்களுக்கு சோர்வு அல்லது பக்கவிளைவுகள் ஏற்படாது என எய்ம்ஸ் மருத்துவர்கள், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...