மத்திய அரசுக்கு ரூ.17.25 கோடி அனுப்பிய நிரவ் மோடியின் சகோதரி.?

இந்தியா

மத்திய அரசுக்கு ரூ.17.25 கோடி அனுப்பிய நிரவ் மோடியின் சகோதரி.?

மத்திய அரசுக்கு ரூ.17.25 கோடி அனுப்பிய நிரவ் மோடியின் சகோதரி.?

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியாக விளங்கும் நிரவ் மோடியின் சகோதரி, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 17.25 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த வைர வியபாரிகள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினர். அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடினர்.

இந்த மோசடி பற்றி சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. நிரவ்மோடி பிரிட்டன் தலைநகர் லண்டனிலும், மெஹுல் சோக்சி கரிபியன் தீவு நாடான டொமினிக்காவிலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிரவ் மோடியின் சகோதரி புர்வி மேத்தாவும், அவரது கணவர் மயங்க் மேத்தாவும் பிரிட்டன் குடியுரிமை பெற்று, லண்டனில் வசிக்கின்றனர்.நிரவ் மோடியின் வங்கி மோசடியில் புர்விக்கும், அவரது கணவருக்கும் பங்கு உள்ளது.

இந்நிலையில், மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு புர்வி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு ள்ளதாவது:லண்டனில் என் பெயரில், என் சகோதரர் வங்கி கணக்கு துவக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த கணக்கில் உள்ள பணம் என்னுடையதல்ல. அதனால் அந்தப் பணத்தை, இந்திய அரசின் கணக்குக்கு மாற்றிவிடுகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனில் உள்ள வங்கி கணக்கிலிருந்து, 17.25 கோடி ரூபாயை, இந்திய அரசின் கணக்குக்கு புர்வி மேத்தா மாற்றியுள்ளதாக அமலாக்கத்துறையும் உறுதி செய்துள்ளது.

Leave your comments here...