16 மாநில கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா

16 மாநில கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

16 மாநில கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

16 மாநில கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

16 மாநிலங்களில் உள்ள கிராமங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் மாற்றியைமக்கப்பட்ட பாரத் நெட் திட்ட உத்தியை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்கள் குடியிருக்கும் அனைத்து கிராமங்களிலும், பாரத் நெட் திட்டம் நீட்டிக்கப்படும். இந்த மாற்றியமைக்கப்பட்ட உத்தியில், சர்வதேச ஏலப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்தும்.

இதில் கண்ணாடியிழை கேபிள் மூலம் இணையதள இணைப்பு வழங்கப்படும். பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கு ரூ.19,041 கோடி மானியத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3.61 லட்சம் கிராமங்களில் இணையதள இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் உள்ள கிராமங்களிலும் பாரத் நெட் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Leave your comments here...