சென்னை விமான நிலையத்தில் ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.. ஒருவர் கைது.!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.. ஒருவர் கைது.!

சென்னை விமான நிலையத்தில் ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.. ஒருவர் கைது.!

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், ஏர் இந்தியா விமானம் ஏஐ-950 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த ஃபசுலுதீன், 26, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர்,

அவரை சோதனையிட்ட போது, 707 கிராம் எடை கொண்ட தங்க பசை மூன்று பொட்டலங்களில் அவரது உடலில் இருந்து கைப்பற்றப்பட்டது. அதிலிருந்து ரூ 31.50 லட்சம் மதிப்பிலான 648 கிராம் 24 கேரட் தங்கம் எடுக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.மொத்தம் ரூ 31.50 லட்சம் மதிப்பிலான 648 கிராம் 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...