ஆளில்லா “ககன்யான்’ விண்கலத்தை இந்தாண்டு டிசம்பரில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல்..!

இந்தியா

ஆளில்லா “ககன்யான்’ விண்கலத்தை இந்தாண்டு டிசம்பரில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல்..!

ஆளில்லா “ககன்யான்’ விண்கலத்தை இந்தாண்டு டிசம்பரில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல்..!

ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதர்களை விண்வெளி ஆய்வுக்கு அனுப்ப, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சுதந்திர தின விழா இது குறித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடந்த 2018 சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியபோது, 75வது சுதந்திர தின விழாவுக்கு முன், இந்தியா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்றார்.

இதையடுத்து, ககன்யான் இஸ்ரோ திட்டத்தை வடிவமைத்தது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, விண்கலத்திற்கான பாகங்களை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப் பட்டது.அதன் அடிப்படையில், 2021 டிச., மற்றும் 2022 ஏப்ரலில் இரு ஆளில்லா விண்கலங்களை அனுப்ப திட்டமிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மனிதர்களை அனுப்ப முடிவு செய்து, நான்கு வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், விண்கலம் தயாரிப்பு பணி முடங்கியது. இதை தொடர்ந்து, இரண்டாவது அலையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, உதிரி பாகங்கள் சப்ளை பாதிக்கப்பட்டது.தயாரிப்பு பணிஅதனால் ககன்யான் திட்டம் மேலும் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. இதையடுத்து இந்தாண்டு டிசம்பரில், ஆளில்லா ககன்யான் sroவிண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்கான பணியில் இஸ்ரோ அதிகாரிகள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...