நான் உலகின் பழமையான தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் பெரிய அபிமானி : மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா

நான் உலகின் பழமையான தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் பெரிய அபிமானி : மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

நான் உலகின் பழமையான தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் பெரிய அபிமானி : மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. 

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:- மிகச்சிறந்த விளையாட்டு வீரரான மில்கா சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது. மில்கா சிங்கின் ஒட்டுமொத்த குடும்பமே விளையாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.நமது நாட்டின் பெரும்பாலான வீரர்கள் சிறிய நகரத்தில் இருந்து வருபவர்கள். அவர்களின் கதைகளை கேட்டால் வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பது நமக்கு புரியும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி, நேர்மை எல்லாம் சேரும்போது ஒரு சாம்பியன் உருவாகிறார். டோக்கியோவுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரின்  சொந்தப் போராட்டமும், பல வருட உழைப்பும் உள்ளது. அவர்கள் தமக்காக மட்டுமல்ல, நாட்டிற்காகவும் செல்கிறார்கள். நண்பர்களே, இதுபோன்ற ஏராளமான பெயர்கள் உள்ளன, ஆனால் மன் கி பாத்தில், இன்று நான் சிலவற்றை மட்டுமே குறிப்பிட முடிந்தது.

மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஜாதவ் ஒரு சிறந்த வில்லாளன். அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். இப்போது ஜாதவ் டோக்கியோவில் தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார்.

இந்திய பெண்கள் ஆக்கி அணியில் பங்கேற்கும் நேகா கோயல், தாயார், சகோதரிகள், சைக்கிள் தொழிற்சாலையில் பணிபுரிந்து குடும்பத்தை நடத்தினர். வில்வித்தையில் பங்கேற்கும் தீபிகாவும், வாழ்க்கையில் பல ஏற்றங்கள் மற்றும் தாழ்வுகளை சந்தித்தனர்டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரும், தங்களது வாழ்க்கையில் கடுமையான போராட்டங்கள் சந்தித்தவர்கள். 

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீர‌ர்களை Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம்

கோவிட்டிற்கு எதிரான போரில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்து உள்ளனர். கோவிட்டிற்கு எதிரான நாட்டு மக்களின் போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் நாம் புதிய மைல்கல்லை அடைந்து உள்ளோம். சில நாட்களுக்கு முன்னர், நாம் மிகப்பெரிய சாதனை படைத்து உள்ளோம். தடுப்பூசி மீதான தயக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு லேசான காய்ச்சல் வரலாம். அது சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும். அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம். நீங்கள் தடுப்பூசி போடாவிட்டால், உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களது கிராமம் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆபத்தை உருவாக்குகிறீர்கள்.

தடுப்பூசியை கண்டுபிடிக்க, நமது விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தனர். விஞ்ஞானிகள் 24 மணிநேரமும் உழைத்தனர். அவர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். தடுப்பூசியை ஏராளமானவர்கள் செலுத்தி கொண்டு உள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வதந்தி பரப்புவோரிடம் விளக்க வேண்டும். நாடு முழுவதும் 31 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 100 வயதாகும் எனது தாயாரும் தடுப்பூசி போட்டு கொண்டார்.

கடந்த ஆண்டு தடுப்பூசிஎப்போது வரும் என்பதே அனைவரின் சந்தேகமாக இருந்தது. தற்போது. லட்சகணக்கானோருக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இலவசமாக கொடுக்கப்பட்டு உள்னன. கிராமங்களில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.ம.பி., மாநிலம் பீடல் மாவட்டத்தில் உள்ள துலேரியா கிராமத்தை சேர்ந்தவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகையில், தடுப்பூசி போடுவதன் அவசியத்தை விளக்கியதுடன், தடுப்பூசி குறித்த சந்தேகங்களை நீக்கினார்.

அப்போது பிரதமர் கூறுகையில், தடுப்பூசி மீதான பயத்தில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். இந்தியாவில், 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட பல கிராமங்கள் உள்ளன. வதந்திகள் தொடர்ந்து பரப்பப்படும். ஆனால், மக்களின் உயிரையும், நாட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும். கோவிட் முடிந்து விட்டது என யாரும் நினைக்க வேண்டாம். வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடையும் வகையிலான நோய் இது. தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரவுகிறது. அதனை மக்கள் நம்ப வேண்டாம். அறிவியல் மற்றும் நமது விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாப் சீக்கிய குரு கோவிந்த்ஜி தமிழ் குறித்து பெருமையாக எடுத்துரைத்துள்ளார். திருக்குறளும் புகழ்பெற்றது. உலகிலேயே தமிழ்மொழி சிறந்த மொழி. தமிழ் மொழி எனக்கு மிக பிடிக்கும். இந்த மொழியின் ரசிகன் நான். நான் உலகின் பழமையான தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் பெரிய அபிமானி. தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது. தமிழ் குறித்து எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது. பருவமழை காலம் துவங்க உள்ளது. இதனால், தண்ணீரை சேகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...