2025-ஆம் ஆண்டுக்குள் 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதற்கு அனைத்து மாநிலத்தின் பங்களிப்பும் முக்கியமானது – பிரதமர் மோடி

சமூக நலன்

ஹிமாசல பிரதேச மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான 2 நாள் நிகழ்ச்சி தர்மஷாலாவில் நேற்று தொடங்கியது. அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும் அளப்பறிய ஆற்றல் வளத்துடன் உள்ளன என்றார். வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதற்கு அனைத்து மாநிலங்கள், மாவட்டங்களின் பங்களிப்பும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

Pictures : invest in Himachal Pradesh. Addressing the Global Investors’ meet.

முந்தைய காலங்களைப் போல அல்லாமல், தற்போது மாநிலங்கள் அனைத்தும் போட்டிபோட்டுக் கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். இலவச மின்சாரம், மலிவான விலையில் நிலம் போன்ற சலுகைகளை அளிப்பதை விட, தொழில்புரிவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொடுப்பதுதான் முதலீட்டாளர்களை கவரும் என்று அவர் தெரிவித்தார். அரசின் தலையீடு, தேவையற்ற சட்டங்கள் தொழில்வளர்ச்சியை பாதிக்கும் என்றும், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகமே முதலீடுகளை கவரும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹிமாசல பிரதேச மாநிலமானது, சுற்றுலா, மருந்துகள் தயாரிப்பு உள்ளிட்ட சில துறைகளில் முதலீடுகளை ஈர்க்கக் கூடிய வகையில் திறமைகளைக் கொண்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.மேலும் தொழில் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில் அதற்கான தரப் பட்டியலில், கடந்த 5 ஆண்டுகளில் 79 இடங்கள் வரை இந்தியா முன்னேறியுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்

Leave your comments here...