அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட கூட்டு பயிற்சி நிறைவு.!

இந்தியாஉலகம்

அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட கூட்டு பயிற்சி நிறைவு.!

அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட கூட்டு பயிற்சி நிறைவு.!

இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மேற்கொண்ட இரண்டு நாள் ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சி 2021 ஜூன் 24 அன்று நிறைவடைந்தது.

இந்திய கடற்படையின் மிக் 29கே விமானம், நீண்டதூர ரோந்து விமானம், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும், இந்திய விமானப்படையின் ஜாக்குவார் மற்றும் சு 30 எம்கேஐ போர் விமானங்கள், வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானம் உள்ளிட்டவையும் இதில் பங்கேற்றன.

அமெரிக்கா தரப்பில் இருந்து ரோனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க் கப்பல், எஃப் 18 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இரண்டு நாள் ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்றன.

இரு நாடுகள் இடையேயான கூட்டை வலுப்படுத்தவும், கூட்டு ராணுவங்களின் பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்களை வலியுறுத்தவும், கடல்களில் சுதந்திரத்தை உறுதி செய்யவும், திறந்தவெளி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக்கான உறுதியை நிலைநாட்டவும், விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கிற்கும் மற்றுமொரு மைல்கல்லாக இந்த பயிற்சி அமைந்தது.

Leave your comments here...