2 டோஸ் தடுப்பூசி போடுவதற்கு டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் 257 கோடி தடுப்பூசி இருக்கும் – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

இந்தியா

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியின் தடுப்பூசி மையத்துக்கு சென்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:உலகிலேயே மிகப்பெரிய, வேகமான தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் 9 மாதத்துக்குள் 2 தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். மோடியின் அழைப்பை ஏற்று 130 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.அவர்களுக்கு முழு வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போடுவதற்காக, வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவின் கைவசம் 257 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும்.

தடுப்பூசியை பரிசோதிக்க நாங்கள் என்ன எலிகளா என்று கேட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...