சர்வதேச யோகா தினம் – நாளை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை.!

இந்தியா

சர்வதேச யோகா தினம் – நாளை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை.!

சர்வதேச யோகா தினம் – நாளை நாட்டு மக்களிடம்  பிரதமர் மோடி  உரை.!

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக அமலில் உள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, சர்வதேச யோகா தினம்-2021-ன் முதன்மை நிகழ்ச்சி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும். இதன் முக்கிய அம்சமாக பிரதமரின் உரை இருக்கும்.

தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் 2021 ஜூன் 21 அன்று காலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் உரை மற்றும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் யோகா செயல்முறை விளக்கம் உள்ளிட்டவையும் இடம்பெறும்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக அனைவரின் கவனமும் ஆரோக்கியத்தின் மீது திரும்பியுள்ள நிலையில் சரியான நேரத்தில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் யோகாவின் செயல்திறனை எடுத்துக்காட்டும் வகையில், ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சியால் 2014 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சர்வதேச யோகா தின தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் ஒரு சாதனையாகும். 2015-ம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினம் உலகெங்கிலும் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது.

பெருந்தொற்றின் காரணமாக யோகாவின் பலன்கள் மீது முன்னெப்போதையும் விட மக்கள் தற்போது அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், ஆயுஷ் அமைச்சகம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யோகப் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா கட்டுக்குள் வரும் என்பதை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் எடுத்துரைத்துள்ளன.

பிரதமரின் உரையை தொடர்ந்து யோகா செயல்முறை விளக்கம் காலை 7 முதல் 7.45 வரை நடக்கும். இதைத் தொடர்ந்து 15 ஆன்மிக தலைவர்கள் மற்றும் யோகா குருக்கள் தங்களது செய்திகளை பகிர்ந்து கொள்வார்கள். குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், டாக்டர் எச் ஆர் நாகேந்திரா, கமலேஷ் படேல், டாக்டர் வீரேந்திர ஹெக்டே, டாக்டர் ஹம்சாஜி ஜெயதேவா, ஓபி.திவாரி, சுவாமி சிதானந்த சரஸ்வதி, டாக்டர் சின்மய் பாண்டே, முனி ஸ்ரீ சாகர் மகராஜ், சுவாமி பரத் பூஷன், டாக்டர் விஷ்வாஸ் மண்டலிக், சகோதரி பி கே ஷிவாணி, எஸ்.ஸ்ரீதரன் மற்றும் தஆன்டாய்நெட் ரோஸி ஆகியோர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள்.

Leave your comments here...