ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் அதானி!

இந்தியா

ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் அதானி!

ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் அதானி!

அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி க்ரீன், அதானி போட்ர்ஸ் என நிறுவனங்களையும், பல வர்த்தகத் துறையில் தனது வணிகத்தையும் விரிவாக்கம் செய்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்து இந்தியாவிலும், ஆசியாவிலும் 2வது இடத்தைப் பிடித்தார்.

உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளார் கௌதம் அதானி. 2021ஆம் ஆண்டில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 43.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.

இச்சூழலில் கௌதம் அதானியின் நிறுவன பங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கும் 3 வெளிநாட்டுக் கணக்குகளை தேசிய பங்குகள் வைப்பு நிறுவனமான NSDL முடக்கியுள்ளதாக செய்தி வெளியானது. இச்செய்தி வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அதானி நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ளது மட்டுமல்லாமல், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்து வருகிறது.

அதானியின் 2-ம் இடத்தை ‘நொங்பூ ஸ்பிரிங்’ எனும் பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார். என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம் அதானி நிறுவனங்களில் அதிக முதலீடுகளை கொண்ட மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை முடக்கியதாக வெளியான செய்தியே அதானியின் சொத்து மதிப்பு சரிய காரணம் ஆகும்.

இவ்வார தொடக்கத்தில் 7,700 கோடி டாலர்களாக இருந்த அதானியின் நிகர சொத்து மதிப்பு, கடந்த சில நாட்களில் 6,300 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் அவர் 900 கோடி டாலர்களை இழந்துள்ளார். பங்குசந்தைகளின் இன்றைய வர்த்தகத்தின் போது அதானி நிறுவனங்கள் மேலும் ஆட்டம் காணக்கூடும் என்கின்றனர்.

பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அதானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்பிரச்னைக்கு முன்னர் அவரது 6 நிறுவனங்களின் பங்குகள் புதிய உச்சத்தில் இருந்தன. ஏப்ரல் 2021-ல் அதானி குழுமம் 10 ஆயிரம் கோடி டாலர்கள் சந்தை மதிப்பு கொண்ட ஆசியாவின் 3-வது குழும நிறுவனமாக மாறியது. தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Leave your comments here...