சென்னை விமான நிலையத்தில் ரூ 10 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ 10 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ 10 லட்சம் மதிப்புடைய  தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ 10 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய கடலூரை சேர்ந்த அருள்ராஜ் சுப்பிரமணியம், 41, என்பவரை வெளியே செல்லும் வழியில் அதிகாரிகள் இடைமறித்தனர்.

அவரது பையை சோதனையிட்ட போது, சாறு பிழியும் சிறு இயந்திரம் ஒன்று வழக்கத்தை விட கனமான எடையுடன் காணப்பட்டது. அதை திறந்து பார்த்தபோது, அதன் மோட்டார் பகுதியில் உருளை வடிவில் தங்கம் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. 200 கிராம் எடையுடன் கூடிய ரூ 10 லட்சம் மதிப்பிலான 24 கேரட் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...