சிவகாசி தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து – 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்.!

தமிழகம்

சிவகாசி தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து – 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்.!

சிவகாசி தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து – 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்.!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று தீப்பெட்டி தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி நாராணாபுரம் சாலையில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான, ஸ்வஸ்திக் மேட்ச் ஒர்க்ஸ் என்ற தீப்பெட்டி தயாரிக்கும் ஆலை உள்ளது.

இங்கு ஆலையின் ஒரு பகுதியில் இயந்திரங்கள் மூலம் தீக்குச்சிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. திடீரென்று தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ மளமளவென்று பற்றி எரிந்ததால், ஆலையில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விபத்து குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, 2 மணி நேரம் போராடி, தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...