தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ 40,700 கோடி ஒதுக்கீடு

இந்தியா

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ 40,700 கோடி ஒதுக்கீடு

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ 40,700 கோடி ஒதுக்கீடு

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ 40,700 கோடி ஒதுக்கபட்டுள்ளது. திட மற்றும் திரவ கழிவு மேலாண்மைக்காக தூய்மை இந்தியா இயக்கத்தின் (கிராமப்புறம்) இரண்டாம் கட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு 2021-22-ம் ஆண்டில் ரூ 40,700 கோடியை ஜல் சக்தி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் தலைமையிலான தூய்மை இந்தியா இயக்கத்தின் (கிராமப்புறம்) தேசிய திட்ட ஒப்புதல் குழு வருடாந்திர செயல்படுத்துதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் பங்கு ரூ 14,000 கோடியாகவும், மாநிலங்கள் செலவு செய்ய வேண்டிய தொகை ரூ 8300 கோடியாகவும் இருக்கும். 15-வது நிதி ஆணையத்தின் மூலம் ரூ 12,730 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் மூலம் ரூ 4,100 கோடியும் கிடைக்க செய்யப்படும்.

மேலும், வர்த்தக அமைப்பு, பெருநிறுவன சமுக பொறுப்பு மற்றும் இதர திட்டங்களின் மூலம் ரூ 1500 கோடி மாநிலங்களால் முதலீடு செய்யப்படும். கிராமங்களில் தூய்மையை உறுதி செய்வதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

தூய்மை இந்தியா இயக்கத்தின் (கிராமப்புறம்) இரண்டாம் கட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டில் 50 லட்சம் வீட்டுக் கழிவறைகளும், ஒரு லட்சம் சமுகக் கழிவறைகளும் கட்டப்படுவதோடு, 2400 வட்டங்களில் நெகிழி கழிவு மேலாண்மை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 386 மாவட்டங்களின் கோபர்தன் திட்டங்களும், 250 மாவட்டங்களில் மனித கழிவு மேலாண்மை ஏற்படுகளும், 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையும் செயல்படுத்தப்படும்.அனைத்து வீடுகளிலும் கழிவறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் வலியுறுத்தினார்.

Leave your comments here...