அயோத்தி தீர்ப்பு: முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் பேச்சு..!

சமூக நலன்

அயோத்தி தீர்ப்பு: முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் பேச்சு..!

அயோத்தி தீர்ப்பு: முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் பேச்சு..!

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.எதிர்பார்ப்புஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன், தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் நபர்களை கண்டறிய, பைசாபாத் மாவட்டத்தில், 16 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சமூக ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கில், முஸ்லிம் தலைவர்களுடன், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.டில்லியில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வியின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர்கள், கிருஷ்ண கோபால், ராம்லால், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான ஷாநவாஸ் உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

முஸ்லிம்கள் தரப்பில், ஜமியத் உலிமா – இ – ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலர் முகமது மதானி, திரைப்பட தயாரிப்பாளர் முசாபர் அலி, அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரிய உறுப்பினர் கமால் பரூக்கி, முன்னாள் எம்.பி., ஷாகித் சித்திக் உட்பட, பலர் பங்கேற்றனர். அயோத்தி தீர்ப்பு பற்றி விவாதித்த தலைவர்கள், ‘தீர்ப்பு எப்படி வந்தாலும், அதை ஏற்று, மக்கள் அமைதி காக்க வேண்டும்’ என, வலியுறுத்தினர்.பின், முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், ”வேற்றுமையில் ஒற்றுமை தான், நம் கலாசாரம். சமூக ஒற்றுமையை காக்க வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் உள்ளது,” என்றார்.

Leave your comments here...