ரூ.43,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான டெண்டர் கோர பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

இந்தியா

ரூ.43,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான டெண்டர் கோர பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

ரூ.43,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான டெண்டர் கோர பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

சுமார் ரூ.43,000 கோடி மதிப்பில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளி கோர (RFP), பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைப்பெற்றது.இதில் பாதுகாப்பு படைகளின் நவீனமயமாக்கம் மற்றும் செயல்பாடு தேவைகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி மதிப்பில், பல்வேறு சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், உத்தி கூட்டுறவு மாதிரி திட்டத்தின் கீழ், 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தபுள்ளி கோருவதற்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் ரூ.43,000 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் 6 நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் கட்டுவதற்கு வழிவகுக்கும்.உத்தி கூட்டுறவு மாதிரியின் கீழ், மேற்கொள்ளப்படும் முதல் முக்கியமான ஒப்புதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.மிகப் பெரிய மேக் இன் இந்தியா திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். தொழில்நுட்பத்தை விரைவாக பெறுவதற்கும், இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கான தொழில் சூழல் அமைப்பை உருவாக்கவும் இது உதவும். இது இறக்குமதியை குறைத்து, தற்சார்பு நிலையை உறுதி செய்யும்.

வான் பாதுகாப்பு ஆயுதங்களை நவீனப்படுத்த வேண்டும் என இந்திய ராணுவம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகிறது. முன்பு இவை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன. அனைத்து வகை ஆயுதங்களையும் உள்நாட்டில் தயாரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருவதால், இத்தகைய ஆயுதங்களை இந்தியாவில் தயாரிக்க பல இந்திய நிறுவனங்கள் முன்வந்தன. அதனால், ரூ.6,000 கோடி மதிப்பில் வான் பாதுகாப்பு ஆயுதங்களை, இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்புதலை பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் வழங்கியது. உதிரி பாகங்களை வாங்கி தயாரிக்கும் பிரிவின் கீழ், இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கப்படவுள்ளன.

செயல்பாடு சவால்களை எதிர்கொள்வதற்கு, பாதுகாப்பு படைகளை தயார்படுத்தவும், தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை விரைவில் சேர்க்கவும், அவசர மூலதன கொள்முதலுக்கான கால வரம்பை பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் நீட்டித்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு படைகள் தங்களின் அவசர மற்றும் முக்கியமான கொள்முதல்களை நிறைவு செய்ய முடியும்.

Leave your comments here...