ஆர்செப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடி : இந்திய நலன் காக்கும் முடிவெடுத்த மோடிக்கு அர்ஜுன் சம்பத் வாழ்த்து..!

சமூக நலன்

ஆர்செப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடி : இந்திய நலன் காக்கும் முடிவெடுத்த மோடிக்கு அர்ஜுன் சம்பத் வாழ்த்து..!

ஆர்செப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடி : இந்திய நலன் காக்கும் முடிவெடுத்த மோடிக்கு அர்ஜுன் சம்பத் வாழ்த்து..!

ஆர்செப் எனப்படும், 16 நாடுகள் அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி, சீனா உள்ளிட்ட பிற நாடுகள், இந்தியாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தகம் நடக்கும். ஒப்பந்ததில் கையெழுத்திடுவதன் மூலம், இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் சந்தையில், இந்திய பொருட்களுக்கு கிராக்கி ஏற்படும் என்றாலும், உள்நாட்டு தொழில் உற்பத்தியும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் மோடி, திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதனை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார் அதில்..

Pictures : PM Modi Attended the meeting on RCEP in Bangkok

சீனாவின் தயாரிக்கப்படும் மலிவான வேளாண் தொழில்முறை பொருட்களை இந்திய சந்தையில் குவிக்க சீனா திட்டமிட்டது முறியடிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தான் மிகப்பெரிய தவறு இழைக்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தான் ஆசியான் கூட்டமைப்பு புருணே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகளுக்கு இந்தியாவில் 74% சந்தை வாய்ப்பை தடையின்றி வாரி வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு 50% வாய்ப்புகளை மட்டும் அந்த நாடுகளில் கிடைத்தது. சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் ஆட்சியில்…
2007 ம் ஆண்டு சீனாவுடன் தடையற்ற வர்த்தகம் குறித்து வாய்ப்பை ஆராய முன்வந்து ஒப்புக் கொண்டது.

2011-2012 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், சீனாவுடன் இணைந்து  ஆர்செப் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டது.இப்படி காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவால் ஆர்செப் (RCEP)  நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருகிறது…

காங்கிரஸ் ஆட்சியின் தவறான முடிவால் தான் இதன் தாக்கம் உள்நாட்டு தொழில்துறையில் இப்போதும் நீடித்து வருகிறது.

இந்தியாவின் கோரிக்கைகள்.

*சீனாவில் மற்றும் பிற நாடுகளிலும் இந்திய உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்த வாய்ப்புகள் தர வேண்டும்…

*இந்தியாவில் உள்நாட்டு தொழிற்சாலைகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்…

*தடையற்ற வர்த்தகம் என்று இந்தியாவில் பொருட்களை குவிக்க சீனாவிற்கு தராமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்…

* ஆர்செப் RCEP ஒப்பந்தத்தில் தடையற்ற வர்த்தகம் என்ற பெயரில் இந்திய சந்தையில் பிற நாடுகள் பொருட்களை குவிக்க இயலாத வகையில் பாதுகாப்பு நுட்ப ஒப்பந்தம் வேண்டும்.

இந்த கோரிக்கையை மற்றும் நிபந்தனைகளை ஏற்க மறுப்பதால் இந்திய ஆர்செப் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் ஆர்செப் ஒப்பந்தம் ஏற்க முடியாது என்று தெரிவித்தார் மோடி. எந்த ஒரு நாடும் பொருட்களை குவித்தால் அதன் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் ஷரத்து சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் பிரதமர் மோடி. ஆர்செப் (RCEP) ஒப்பந்தப்படி அனைத்து 16 உறுப்பினர் நாடுகளுக்கும் MNF- (Most Favoured Nation) அந்தஸ்து தர முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தியாவின் விவசாய உற்பத்தி பொருட்களை, சிறு, குறு, நடுத்தர உற்பத்தி தொழிற்சாலைகள் பாதுகாக்கும் வகையில் ஆர்செப்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா திட்டவட்டமாக மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கு பாடம் புகட்டி இந்திய நலன் காத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார் அர்ஜுன் சம்பத்.

Leave your comments here...