கொரோனா ஊரடங்கு : சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு அளித்து வரும் முதியவர்.!

உள்ளூர் செய்திகள்சமூக நலன்

கொரோனா ஊரடங்கு : சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு அளித்து வரும் முதியவர்.!

கொரோனா ஊரடங்கு : சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு அளித்து வரும்  முதியவர்.!

தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏழை-எளிய, ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் சிலர் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகள் என ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.

இதேபோல் தெருக்கள் மற்றும் வீதிகளில் சுற்றுகின்ற நாய்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு இருப்பதால் அவற்றிக்கு உணவளித்து வரும் சிலர், தற்பொழுது ஏற்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாய்களுக்கு உணவு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.,

இந்தநிலையில், மதுரை தவிட்டு சந்தை பகுதியை சேர்ந்த 53 வயதான முருகன் என்ற முதியவர் அப்பகுதியில் ஆவின் பாலகம் ஒன்றை நடத்திவருகிறார். கடந்த 2 வருடங்களாக சாலையோரம் சுற்றித்திரியும் 300க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தம்மால் முடிந்த அளவு இறைச்சி கலந்த உணவு, தயிர் சாதம் லெமன் சாதம் என மூன்று வேளை உணவு வழங்கி வருகிறார். மேலும், அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் இவர் கொண்டு வரும் உணவிற்காக காத்திருப்பதாகவும், அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த முதியவரின் தன்னலமற்ற சேவையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
செய்தி: Ravi Chandran

Leave your comments here...