கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே நோய் பரவும் – மத்திய அரசு

இந்தியா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே நோய் பரவும் – மத்திய அரசு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே நோய் பரவும் – மத்திய அரசு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மினாலோ, இருமினாலோ மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் என கூறப்பட்ட நிலையில், தற்போது பேசினாலே பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில்:- கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிய பின் அல்லது இருமிய பின் அவரது எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை சுவாசிப்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும், பேசும் போதும் அவரிடம் இருந்து வெளிப்படும் எச்சிலின் பெரிய துகள்கள் 2 மீட்டர் தூரத்துக்குள் கீழே விழுந்துவிடும் என்றும், ஆனால் ஏரோசோல் என்ற எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும் என்பதால், காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், காற்று வசதி இல்லாத இடங்கள் போன்றவற்றில் இந்த ஏரோசோல்கள் விழுந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் எனக் கூறியுள்ள சுகாதாரத்துறை, வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதோடு, கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் இருப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது.காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அதனால் வீடுகளில் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave your comments here...