விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.!

தமிழகம்

விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.!

விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.!

மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருத்தில் கொண்டு அவர்களுக்கும், கொரானா தடுப்பூசியை வலையங்குளம் ஆரம்ப சுகாதாரத்தில் பணியாற்றும் மருத்துவரை கொண்டு மதுரை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் மூலம் கரோன தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் விமான நிறுவன ஊழியர்களுக்கு, விரைவாக கொரானா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதனை தொடர்ந்து விமான நிலைய ஊழியர்கள், சுங்க லாகா நுண்ணறிவு பிரிவினர், தீயணைப்பு துறை மற்றும் இமிகரேஷன் துறையைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோவிட் ஷில்ட்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களிடம் செவிலியர்கள் உடல் உபாதை ஏற்பட்டால் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்டமல் மாத்திரை மட்டுமே சாப்பிட வேண்டும், வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாத்திரைகள் எதுவும் சாப்பிடக் கூடாது, என்றும் குறைந்தபட்சம் 2 நாட்கள் புகைபிடிக்ககூடாது, 5 நாட்களுக்குள் மது அருந்தக்கூடாது கூடாது என அறிவுறுத்தினர்.

மேலும் பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, விவசாய அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து அதன் மூலம் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டாவது தவணை தடுப்பூசி என்பது 85 முதல் 112 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்,

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது. வெளிமாநிலங்களில் இருந்து மதுரைக்கு வரும் பயணிகளிடமிருந்து விமானநிலைய ஊழியர்களுக்கு கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது எனவும்,இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து விமான நிலைய ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் அனைவருக்கும் கொரானா முதல் தவணை தடுப்பூசி செலுத்த உள்ளதாக கூறினார்.

Leave your comments here...