சுவேந்து அதிகாரியின் தந்தை, தம்பிக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம்

அரசியல்

சுவேந்து அதிகாரியின் தந்தை, தம்பிக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம்

சுவேந்து அதிகாரியின் தந்தை, தம்பிக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சுவேந்து அதிகாரி, கடந்த டிசம்பரில் அவரது கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்த சுவேந்து அதிகாரி, சமீபத்திய சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜியை தோற்கடித்தார். எனினும், திரிணமுல் காங்., பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதை அடுத்து, மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, சுவேந்து அதிகாரிக்கு கொலை மிரட்டல்கள் அதிகரித்ததால் அவருக்கு, ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, சுவேந்து அதிகாரியின் தந்தை, சிசிர் குமார் அதிகாரி, தம்பி, திபையந்து அதிகாரி ஆகியோருக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளதால் பாதுகாப்பு வழங்க, மத்திய புலனாய்வு துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இதை ஏற்று, சிசிர் குமார், திபையந்து ஆகியோருக்கு, ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அவர்கள் இருவருக்கும், தலா, ஐந்து துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள்.சிசிர் குமார் அதிகாரி, பா.ஜ., எம்.பி., ஆகவும், திபையந்து அதிகாரி, திரிணமுல் காங்., எம்.பி., ஆகவும் உள்ளனர்.

Leave your comments here...