ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி 99 ஆயிரத்து 122 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு.!

இந்தியா

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி 99 ஆயிரத்து 122 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு.!

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி 99 ஆயிரத்து 122 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு.!

ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு, 99 ஆயிரத்து, 122 கோடி ரூபாய், ‘டிவிடெண்டு’ வழங்க முடிவு செய்துள்ளது. நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், வங்கியின் இயக்குனர் குழு கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உள்நாடு மற்றும் சர்வதேச பொருளாதார சூழல், கொரோனா சவாலை சமாளிக்க, ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த நிதிக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், ரிசர்வ் வங்கியின் நிதியாண்டை, ஜுலை – ஜூன் என்ற நடைமுறையில் இருந்து, ஏப்., – மார்ச் ஆக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, கடந்த, 2020 – 21ம் நிதியாண்டின், ஜுலை – மார்ச் வரையிலான ஒன்பது மாத கால நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து, மத்திய அரசுக்கு, 99 ஆயிரத்து, 122 கோடி ரூபாய், ‘டிவிடெண்டு’ வழங்க, இயக்குனர் குழு அனுமதி வழங்கியது. மேலும், பிமல் ஜலான் அறிக்கைப்படி, ரிசர்வ் வங்கியின் இடர்பாட்டு நிதியை, 5.50 சதவீதமாக பராமரித்து வரவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ரிசர்வ் வங்கிக்கு, நிதிச் சந்தை வர்த்தக நடவடிக்கைகள் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. இதில், இடர்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது போக உபரியாக உள்ள நிதி, டிவிடெண்டாக மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த, 2019 – 20ம் நிதியாண்டில், ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு 57 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் டிவிடெண்டு வழங்கியது. இது, 2018 – 19ம் நிதியாண்டில், ஒரு லட்சத்து, 76 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி அளிக்கும் டிவிடெண்டு, கொரோனா தொடர்பான செலவினங்களை சமாளிக்க, மத்திய அரசுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...