“டவ்-தே புயலை” எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய விமானப்படை.!

இந்தியா

“டவ்-தே புயலை” எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய விமானப்படை.!

“டவ்-தே புயலை” எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய விமானப்படை.!

இந்தியாவின் மேற்கு கடற்கரைகளில் மிக அதிக மழையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படும் டவ்-தே புயலின்போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படையின் 16 விமானங்களும், 18 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன .

ஐஎல்-17 ரக விமானம், பதின்டா முதல் ஜாம்நகர் வரை 127 நபர்களையும் 11 டன் சரக்குகளையும் கொண்டு சேர்த்துள்ளது. சி-130 ரக விமானம் பதின்டா முதல் ராஜ்கோட் வரை 25 நபர்களையும் 12.3 டன் சரக்குகளையும் கொண்டு சேர்த்துள்ளது. மேலும் இரண்டு சி-130 ரக விமானங்களில் 126 நபர்களும் 14 டன் சரக்குகளும் புவனேஸ்வர் முதல் ஜாம்நகர் வரை பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்த கடற்கரை பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலையின் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், இந்தப் பகுதிகளில், இந்திய விமானப்படையின் கொவிட் நிவாரண பணிகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொவிட் நிவாரணப் பணிகளுடன் கூடுதலாக புயல் நிவாரண நடவடிக்கைகளும் இங்கு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...