கொரோனா சிகிச்சையில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக மருத்துவ சேவையில் ராணுவ குழு.!

இந்தியா

கொரோனா சிகிச்சையில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக மருத்துவ சேவையில் ராணுவ குழு.!

கொரோனா சிகிச்சையில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக மருத்துவ சேவையில் ராணுவ குழு.!

கொரோனா சிகிச்சையில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக ராணுவம், கப்பல் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு, ‘ஆப்பரேஷன் கோஜீத்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த குழுவில் போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவ உதவியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து, ஒருங்கிணைந்த ராணுவ பணியாளர்களின் மருத்துவப் பிரிவுக்கான துணைத் தலைவர் மாதுரி கனித்கர் கூறியதாவது:ஊசி போடுவது உள்ளிட்ட அடிப்படை மருத்துவ சேவைகள் செய்வதற்கு, போர்க்கள மருத்துவ உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இவர்களை போலவே அனைத்து மாநில அரசுகளும், இளம் தன்னார்வலர்கள் அடங்கிய மருத்துவ பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு அடிப்படை மருத்துவப் பயிற்சி அளிப்பதன் வாயிலாக, மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு தேவையான பணி ஓய்வை முறையாக அளிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...