கூலர் இயந்திரம் பழுது – தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்.!

தமிழகம்

கூலர் இயந்திரம் பழுது – தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்.!

கூலர் இயந்திரம் பழுது – தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்.!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழக அரசும் அனுமதி அளித்தது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. நேற்று ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை பிரத்யேக டேங்கர் லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறால் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திரங்களை பழுதுபார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave your comments here...