வெளுக்கப் போகும் மழை – 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழகம்

வெளுக்கப் போகும் மழை – 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வெளுக்கப் போகும் மழை – 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியில் இருந்து தென் தமிழகம் வரை 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரிம் ஈரோடு, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதே போல தென் மேற்கு அரபிக்கடலில் சூறாவளி காற்றுஇ மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்களில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave your comments here...