தமிழகம்
போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் பிடிபட்ட பாம்பு.!
- May 6, 2021
- jananesan
- : 784

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிமற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலைகள் வனப்பகுதி அதிகம் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விலங்குகள் இரை தேடி இடம் பெயர்ந்து அடிக்கடி ஊருக்குள் வருகின்றன.
அந்த வகையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பெரிய பாம்பு ஒன்று இருந்ததாக வாடிப்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது.
தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி லாவகமாக பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் ஒப்படைத்தனர்.
Leave your comments here...