ஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு – ஈஷா யோக மையம்

சமூக நலன்தமிழகம்

ஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு – ஈஷா யோக மையம்

ஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –  ஈஷா யோக மையம்

கொரோனா 2-வது அலையின் பாதிப்பால் நாம் முன்னெப்போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறோம்.

இந்த சமயத்தில் ஊடகத்தில் பணியாற்றுபவர்களின் பணி கூடுதல் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. செய்தி சேகரிப்பதற்காக தொடர்ந்து களத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உள்ளது.

இந்த பெருந்தொற்று காலத்தில் ஒருவர் உறுதியான நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நன்கு இயங்க கூடிய நுரையீரல் திறனையும் பெற்று இருப்பது மிக அவசியம்.

இதன் அடிப்படையில், முன் களப் பணியாளர்களான ஊடக நண்பர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் 8-ம் தேதி பிரத்யேக யோகா வகுப்புகளை ஆன்லைன் முறையில் இலவசமாக நடத்த ஈஷா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. 45 நிமிடங்கள் நடக்கும் இவ்வகுப்பில் நீங்களும் உங்கள் குடும்பத்தினர்களும் பங்கேற்கலாம்.

இதில் 3 நிமிடங்களில் செய்யும் எளிய யோக பயிற்சிகளை ஈஷா யோகா ஆசிரியர் கற்றுக்கொடுப்பார். இவ்வகுப்பில் நீங்கள் உங்கள் இருப்படத்தில் இருந்தப்படியே பங்கேற்கலாம்.

சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யோகாவின் பயன்கள்:
1.நுரையீரல் திறன் அதிகரிக்கும்
2.நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்
3.மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் இருந்ததால் அதை கண்டறிய முடியும்

விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களை tn.mediarelations@ishafoundation.org என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.
பெயர்:
பணியாற்றும் ஊடகத்தின் பெயர்:
பதவி:
ஊர்:
வீட்டு முகவரி:
மொபைல் எண்:
இமெயில் முகவரி:

Leave your comments here...