சென்னை விமான நிலையத்தில் 1.35 கிலோ தங்கம் பறிமுதல்..!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் 1.35 கிலோ தங்கம் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் 1.35 கிலோ தங்கம் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் 1.35 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.65.87 லட்சம்.
துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில்(6இ-66) தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது விமானத்தின் முன்புறத்தில் உள்ள கழிவறையின் வாஷ்பேஷினுக்கு கீழே, வெள்ளை நிறத்தில் வட்ட வடிவ தட்டு ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் வெள்ளை நிற பூச்சை அகற்றிப் பரிசோதித்தபோது, அது ஒரு கிலோ எடையுடன் கூடிய தங்கம் என கண்டறிப்பட்டது. இதன் மதிப்பு ரூ.48.77 லட்சம். இதற்கு யாரும் உரிமை கோரவில்லை.

விமானநிலையத்தில் போக்குவரத்து பகுதியை கண்காணித்த போது, அங்குள்ள கழிவறை ஒன்றில் இரண்டு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை திறந்து பார்த்தபோது, 503 கிராம் எடையில் தங்கப் பசை இருந்தது. இவற்றிலிருந்து 356 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.17.1 லட்சம். இதற்கும் யாரும் உரிமை கோரவில்லை.

மொத்தம் ரூ.65.87 லட்சம் மதிப்பில் 1.35 கிலோ தங்கம், சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

Leave your comments here...