கொரோணா விதிமுறைகளை பின்பற்றி கோவில் திருவிழா கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் – கிராமிய நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் வலியுறுத்தல்.!

சமூக நலன்தமிழகம்

கொரோணா விதிமுறைகளை பின்பற்றி கோவில் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் அதிகமாக வசிக்கின்றனர் . தமிழ்நாடு வெளி மாநிலங்கள் மற்றும்வெளிநாடுகளில் கிராமிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி பிழைப்பு நடத்தி வருகின்றனர் சென்ற ஆண்டு கொரோணா ஊரடங்கு காரணத்தால் நாட்டுப்புற இசை கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மீண்டும் தங்களுடைய வாழ்க்கை ஓடத் தொடங்கியது முடங்கி கிடந்த கலை ஞர்கள் கச்சேரி களுக்கு போகக் தொடங்கினர். தற்போது மீண்டும் கொரோனா தடுக்கும் வகையில் கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அரசு தடை விதித்துள்ளது.

இது குந்த்து சங்கம் சார்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கடந்த ஆண்டு கொரோனா காலங்களில் போதுமான வருமானம் இன்றி தவித்தோம். இந்த நிலையில் மீண்டும் திருவிழா நடத்த அரசு தடை விதித்துள்ளது வறுமையில் வாடும் கிராமிய இசை கலைஞர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொரோணா விதிமுறையை பின்பற்றி கோவில்களில் திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது

Leave your comments here...