கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை

தமிழகம்

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்:
* திருவிழா, மதக் கூட்டங்களுக்கு தடை
* தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி
* பேருந்துகளில் மக்கள் நின்றுக்கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
* கோயம்பேடு உட்பட தமிழகத்தின் அனைத்து பெரிய காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை
* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி
* ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி
* வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருநு்து தமிழகம் வர இ-பதிவு முறை தொடரும்
* திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி
* இறுதி ஊர்வலத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதி
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் பயணிக்க அனுமதி
* தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி
* பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகளை நடத்தலாம்
* உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், விழாக்களுக்கு அனுமதி
* உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கையில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தலாம். உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி
* அருங்காட்சியகம், பொழுதுப்போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், உயிரியல் பூங்காக்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி
* சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

Leave your comments here...