தமிழகத்தில் 72.78 % வாக்குப்பதிவு – மாவட்டம் வாரியாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவிப்பு .!

அரசியல்தமிழகம்

தமிழகத்தில் 72.78 % வாக்குப்பதிவு – மாவட்டம் வாரியாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவிப்பு .!

தமிழகத்தில் 72.78 % வாக்குப்பதிவு – மாவட்டம் வாரியாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவிப்பு .!

தமிழகத்தில் நேற்று (ஏப்.,6) 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், 3585 ஆண்கள்; 411 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் இருவர் என மொத்தம் 3998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

கடந்த ஒரு மாதமாக அனைத்து வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இரவு 7 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவின் இறுதி நிலவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக பாலகோட் தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகி உள்ளது என கூறினார்.

-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகள் பதிவாகின.
-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகள் பதிவவாகி உள்ளது.
-கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
-நாம் தமிழர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
-துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்ட போடி தொகுதியில் 73.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
-பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் 74.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
-டிடிவி தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
-திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் 58.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
-பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் 58.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருவள்ளூர் -70.56%
சென்னை -59.06 %
காஞ்சிபுரம் – 71.98%
வேலூர் – 73.73%
கிருஷ்ணகிரி – 77.30%
தர்மபுரி – 82.35%
திருவண்ணாமலை – 78.62%
விழுப்புரம் -7856%
சேலம் – 79.22%
நாமக்கல் – 79.72%
ஈரோடு – 77.07%
நீலகிரி – 69.68%
கோவை – 68.70%
திண்டுக்கல் – 77.13%
கரூர் – 83.92%
திருச்சி – 73.79%
பெரம்பலூர் – 79.09%
கடலூர் – 76.50%
நாகை – 75.48%
திருவாரூர் – 76.53%
தஞ்சை – 74.13%
புதுக்கோட்டை – 76.41%
சிவகங்கை – 68.94%
மதுரை -70.33%
தேனி 71.75%
விருதுநகர் – 73.77%
ராமநாதபுரம் – 69.60%
தூத்துக்குடி -70.20%
திருநெல்வேலி – 66.65%
கன்னியாகுமரி – 68.67%
அரியலூர் – 82.47%
திருப்பூர் – 70.12%
கள்ளக்குறிச்சி – 80.14%
தென்காசி – 72.63%
செங்கல்பட்டு -68.18%
திருப்பதூர் – 77.33%
ராணிப்பேட்டை – 77.92%

Leave your comments here...