தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார்.!

இந்தியாசமூக நலன்

தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார்.!

தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார்.!

பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும்.

4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். தேர்வுகள் குறித்தும் அது சம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம்.

கடந்த ஆண்டு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உட்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் வெற்றி பெற்று, பிரதமருடன் பேசினர். முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தேர்வு குறித்த அழுத்தம் மற்றும் பதற்றத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். இந்த ஆண்டு மாணவர்களுடன் பிரமதர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-பல்வேறு கேள்விகளுடன் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்கும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சி நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

டவிட்டர் பதிவுடன் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடி பேசி இருப்பதாவது:-


உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாக இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அது முடியவில்லை.எனவே நமது கலந்துரையாடல் ஆன்லைன் வழியாக நடக்கிறது. வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் மாணவர்கள் தேர்வை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave your comments here...