திமுக மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியினர் 2 ஆயிரம் பேருடன் பேரணி.!

அரசியல்

திமுக மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியினர் 2 ஆயிரம் பேருடன் பேரணி.!

திமுக மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியினர் 2 ஆயிரம் பேருடன் பேரணி.!

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் வரை திமுக மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியினர் 2 ஆயிரம் பேருடன் பேரணி விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திருப்பரங்குன்றம் சட்டமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாய் ஆகியோர் வாக்கு சேகரித்து பேரணியில் கலந்துகொண்டனர்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் தலைமையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ், கம்யூஸ் ஸ்ட் மதசார்பற்ற கூட்டணி தொண்டர்கள் பிரம்மாண்ட பேரணி தற்போது நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்மாநில தகவல் தொடர்பு பிரிவு துணை தலைவர் சத்தியன் . திருப்பரங்குன்றம் நேரு,திமுக Uகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி,உசிலை சிவா மற்றும் கூட்டணி கட்சியினர் திராளாக கலந்து கொண்டனர்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறும்போது:- மக்களவைத் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியை வெற்றி பெற்றோம் அதேபோல் தற்பொழுது இரண்டாயிரம் வாக்குகள் கூடுதலாக 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். அதிமுக வேட்பாளராக களத்தில் உள்ள ராஜன்செல்லப்பா மேயர் சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பணிகளில் இருந்தும் வடக்கு தொகுதியில் இருந்து மாறி இங்கேயே வந்து போட்டியிடுகிறார் அவர் சம்பாதித்த பணத்தை இங்கே செலவழிக்கிறார் அதை வாங்கிக்கொண்டு மக்கள் அறிவியல் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வேண்டுகிறேன: அடிமைகளுக்கும் சுதந்திரமான மனிதர்களுக்கும் நடைபெறக்கூடிய தேர்தல் பத்தாண்டு காலம் ஆறரை கோடி தமிழர்களை அடிமையாக்கியது போதும் சுயமரியாதை மிக்க சுயாட்சி மீது மதிப்பு கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத் அவர் கூறியதுபோல் அதிமுக வழங்கிய கடைசி வாய்ப்பு 500 ரூபாய் நோட்டு, அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டு தொகுதி முழுக்க பெரிய எழுச்சியை உருவாக்கி இருக்கிறது மதுரையைப் பற்றி இங்கு உள்ள அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பேசியிருக்கிறார்களா. நாங்கள்தான் மாணிக்கம் தாகூர் மற்றும் நான்தான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினோம், இபிஎஸ் ஓபிஎஸ் மதுரையைப் பற்றி விமான நிலையத்தை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி எதுவும் குறிப்பிட்டிருக்கிறார்களா எதுவும் கிடையாது அமைச்சர் செல்லூர் ராஜு 10 வருடம் நான் தொகுதிக்கு என்ன செய்தேன் என கூறி வாக்கு கேட்காமல் நான் தாயில்லா பிள்ளை என வாக்குக் கேட்கிறார்.

மற்றொரு அமைச்சர் எனக்கு பிரஷர் சுகர் இருக்கிறது எனக் கூறி கேட்கிறார் பத்து வருடங்களாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். இன்னொரு அமைச்சர் இது எனக்கு கடைசி தேர்தல் என்று கேட்கிறார். திண்டுக்கல்லில் உள்ளவர்கள் தேர்தல் முடிவை எதிர் பார்க்கிறார்கள் என வெங்கடேசன் MP பேசினார். முடிவில் வேட்பாளர் பொன்னுத்தாயி பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது தொகுதி மக்களின் குறைகளை நிறைவேற்றுவேன் திருப்பரங்குன்றத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவேன் மற்றும் தொகுதி மக்களிடம் இருந்தே சல்லி பைசா தராமல் தொகுதி வளர்ச்சி நிதியை முழுமையாக பயன்படுத்தி எனக் கூறினார்.

செய்தி: Ravi Chandran

Leave your comments here...