ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி.!

ஆன்மிகம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி.!

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி.!

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

கடந்த 6-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 14 நாட்கள் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வாகனச் சேவையை தரிசித்தனர்.

கடந்த 21 நாட்களாக உண்டியல்களில் சேர்ந்த காணிக்கைகள் நேற்று கோவில் வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரூ.1 கோடியே 1 லட்சத்து 23 ஆயிரத்து 579 கிடைத்தது. தங்கம் 82 கிராம், வெள்ளி 383 கிலோ 150 கிராம், வெளிநாட்டுப் பணம் 39 கிடைத்ததாக, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்தார்.

Leave your comments here...