திருப்பரங்குன்றம் தொகுதியில் எதிரெதிரே போட்டியிட இருந்த எம்.எல்.ஏ.க்கள் ஒரே கூட்டணியில் இணைந்து நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் ஆதரவு.!

அரசியல்

திருப்பரங்குன்றம் தொகுதியில் எதிரெதிரே போட்டியிட இருந்த எம்.எல்.ஏ.க்கள் ஒரே கூட்டணியில் இணைந்து நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் ஆதரவு.!

திருப்பரங்குன்றம் தொகுதியில் எதிரெதிரே போட்டியிட இருந்த எம்.எல்.ஏ.க்கள் ஒரே கூட்டணியில் இணைந்து நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் ஆதரவு.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜன்செல்லப்பா மற்றும் திருப்பரங்குன்றம் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணனுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி வழங்கப்படாததால் திமுகவில் இருந்து விலகி தற்சமயம் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜகவில் இணைந்தார்.

டாக்டர் சரவணன் பிஜேபியில் இணைத்த அன்றைக்கே அவருக்கு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பிஜேபி கட்சியின் தலைமை அதிகார பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் திருப்பரங்குன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடும் முன்னாள் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வே.வே. ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். தொடர்ந்து திமுகாவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் சீட்டு ஒதுக்கப்பட்டு இருந்தால் தற்சமயம் திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிற ராஜன்செல்லப்பாவை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் , திமுகவில் அவருக்கு சீட்டு மறுக்கப்பட்ட காரணத்தினால் பிஜேபி கூட்டணி கட்சியோடு சேர்ந்ததால் தற்போது , இருவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர்.
எதிரெதிரே போட்டியிட இருந்த இருவரும் தற்போது கூட்டணிக் கட்சியின் மூலமாக நண்பர்களாக மாறி ஒருவரை ஒருவர் அவரவர் தொகுதியில் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அவர்களது தொகுதியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இவர்களின் சந்திப்பு. கடந்த 2016 யில் வடக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜன் செல்லப்பா தொகுதியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள டாக்டர் சரவணன் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜன்செல்லப்பா தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...