அனைவருக்கும் அம்மா வாஷிங் மெஷின் : அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டனர்..சிறப்பு அம்சங்கள் என்னென்ன.?

அரசியல்

அனைவருக்கும் அம்மா வாஷிங் மெஷின் : அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டனர்..சிறப்பு அம்சங்கள் என்னென்ன.?

அனைவருக்கும் அம்மா வாஷிங் மெஷின் : அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டனர்..சிறப்பு அம்சங்கள் என்னென்ன.?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 178 தொகுதிகளில் களமிறங்குகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடும் பணி தொடங்கியது.

திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியான நிலையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இருவரும் வெளியிட்டனர்.

முக்கிய அம்சமாக அம்மா வாஷிங் மெஷின் அனைவருக்கும் வீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

* காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலை அமைக்கப்படும்
* மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்
* மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயர் சூட்டப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,500
* அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்
* வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும்
* பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகை தொடரும்
* நகர்புறங்களை சுற்றி சுற்றுச்சாலை அமைக்கப்படும்
* மாவட்டம்தோறும் மினி ஐடி பார்க் நிறுவப்படும்
* நாகை துறைமுகத்தில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்.
* கச்சத்தீவு மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
* பள்ளி மாணவர்களுக்கு தினமும் 200 மி.லி., பால் அல்லது பால் பவுடர் வழங்கப்படும்
* தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்
* ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்
* பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள், ஓய்வூதியம்
* பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து மத ஆலயங்களும் புணரமைக்கப்படும்
* ஏழை, எளிய மக்களுக்கான சுலபத் தவணைத் திட்டத்தில், வட்டியில்லா கடனுதவி தரும் அம்மா பேங்கிங் கார்டு மூலம் கடனுதவி
* நகரப் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை
* குடும்பத் தலைவியருக்கு ரூ.1,500 வழங்கும் குல விளக்கு திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்
* அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்
* ஆண் வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கான உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும்
* யுபிஎஸ்சி, நீட், ஐஐடி – ஜேஇஇ, டிஎன்பிஎஸ்சி ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி மையம்
* கரிசல் மண் – களிமண் – தூர்வை மண் எடுக்க தடையில்லா அனுமதி
* அனைத்து நகரங்களிலும் அம்மா ரோந்து வாகனங்கள்
* இரண்டாம் கட்ட நகரங்களில் 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு
* விவசாயிகளை ஊக்குவிக்கவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7,500 ரூபாய் உழவு மானியம் வழங்கப்படும்.
* மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, அரிசி, கரும்பு, வாழை, சிறுதானியங்கள் உள்ளிட்ட முக்கிய விளைபொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை தமிழக அரசால் வழங்கப்படும்.
* புதிய நிலமெடுப்பு சட்டத்தின்படி உடனடி இழப்பீடு.
மேற்கண்ட அறிவிப்புகளுடன் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave your comments here...