விவசாய நிலத்தை உழுவதற்கு உழவு மாடுகள் கிடைக்காததால்… மகனுடன் களத்தில் உழவு பணியை செய்த விவசாயி – வறுமையின் கோரதாண்டவம்.!

சமூக நலன்தமிழகம்

விவசாய நிலத்தை உழுவதற்கு உழவு மாடுகள் கிடைக்காததால்… மகனுடன் களத்தில் உழவு பணியை செய்த விவசாயி – வறுமையின் கோரதாண்டவம்.!

விவசாய நிலத்தை உழுவதற்கு உழவு மாடுகள் கிடைக்காததால்… மகனுடன் களத்தில் உழவு பணியை செய்த விவசாயி – வறுமையின் கோரதாண்டவம்.!

உழவு மாடுகள் கிடைக்காததால்,மாடுகள் செய்ய வேண்டிய பரம்படிக்கும் விவசாய பணியை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ’தந்தை-மகன்; சேர்ந்து செய்தனர் சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது

விவசாய பணிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் வருகையால், தமிழக கிராமங்களில் விவசாயிகள் வீடுதோறும் வளர்த்து வந்த உழவு மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது.நெல் நடவு செய்வதற்கும், மக்கா சோளம், கடலை உள்ளிட்ட பயறு வகைகள் பயிரிடுவதற்கு நடவுக்கு பணிகளுக்கு டிராக்டர் மூலம் உழவு செய்வதற்கு பதில் மாடுகளை வைத்து மேற்கொள்ளப்படும் விவசாய பணிகள் சிறப்பாக இருக்கும்.குறிப்பாக நெல் நடவிற்கு உழுத வயலை சமன் செய்ய மாடுகள் தான் இன்றளவும் அதிகம் பயன்படுகின்றன.

இந்நிலையில் உழவு மாடுகளுக்கு தட்டுப்பாடு உள்ளதால், குறைந்த நிலங்கள் உள்ளவர்களும் தங்கள் நிலத்தை சமன் செய்ய மனிதர்களே மாடுகளுக்குப் பதில் பரம்படிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதே போலத்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் முதலைக்குளம் கிராமத்தில் கண்மாய் பாசனத்தில் 400 ஏக்கர் வரை விவசாய பணிகள் நடக்கிறது,

ஆனால் இக்கிராமத்தில் ஒரு உழவு மாடுதான் உள்ளது.இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி பாண்டி தன் 50 செண்ட் வயலில் கண்மாய் பாசனத்தில் நெல் நடவு செய்ய உழவு பணிகளை மேற்கொண்டார். நடவிற்கு முன் வயலை பரம்படிக்க காத்திருந்தும் சிறிய வயல் என்பதால் உழவு மாடுகள் கிடைக்கவில்லை. நான்கு நாட்கள் மாடுகளுக்காக காத்திருந்தார் கிடைக்கவில்லை

இந்நிலையில் நாற்றங்காலில் இருந்து பறித்த நெல் நாற்றுகள் வீணாகும் என்பதால் தனது 14 வயது மகன் கவியரசு உதவியுடன் பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டார். கம்பு கயிறு உதவியும் தனது மகனுடன் சேர்ந்து பரம்பு அடிக்கும் உழவு பணியில் ஈடுபட்டார் குறைந்த நிலம் என்பதாலும், உழவு மாடுகள் வாடகைக்கு கிடைக்காததாலும், வறுமையும் வாட்டி வருவதால் தன் கையே தனக்குதவி என்ற பழமொழிக்கேற்ப இந்த விவசாயி உழவு பணிகளை தனது மகன் உதவியுடன் வயலில் இறங்கி மேற்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: Ravi Chandran

Leave your comments here...