சென்னை விமான நிலையத்தில் ரூ 39.82 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ 39.82 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் ரூ 39.82 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 39.82 லட்சம் மதிப்பிலான 867 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய தஞ்சாவூரை சேர்ந்த பிஸ்மில்லா கான், 21, மற்றும் தென்காசியை சேர்ந்த பெண்மணியான ஹெப்சிபியூலா கார்த்தீசன், 30, ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களை சோதனையிட்டபோது, அவர்களது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பொட்டலங்களில் 867 கிராம் எடையுடைய தங்க பசை கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 39.82 லட்சம் ஆகும்.மொத்தம் ரூ 39.82 லட்சம் மதிப்பிலான 867 கிராம் தங்கம், இரண்டு வழக்குகளில் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...