சோழவந்தான் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.!

ஆன்மிகம்

சோழவந்தான் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.!

சோழவந்தான் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.!

சோழவந்தான் அருகே கோயில் குருவித்துறை வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் திண்டுக்கல் மதுரை மாவட்டம் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை புரிந்து அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர்.

இக்கோவிலில் கடந்த 11ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது அதில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். கடந்த புதன்கிழமை இரவு 12 மணியளவில் மயான பூஜை நடந்தது கடந்த வியாழக்கிழமை வைகை ஆற்றிலிருந்து மாசாணியம்மன் சக்தி கரகம் எடுத்து வந்தனர். நேற்று முந்தினம் காலை பூக்குழி கண்திறந்து வளர்த்தனர் பதினோரு மணி அளவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர் நேற்று மாலை முருகேஸ்வரி தலைமையில் முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தில் வந்து வைகையாற்றில் சக்தி கரகம் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று சக்தி அலங்காரம் நடைபெறும் இரவு 6 மணி அளவில் மகா முனீஸ்வரர் கருப்புசாமி பூசை நடைபெறுகிறது அம்மனுக்கான பூ அலங்கார வேலைப்பாடுகளை மன்னாடிமங்கலம் அம்மா பேரவை ராஜபாண்டி செய்திருந்தால் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் கோவில் நிர்வாகிகள் மாசாணி சின்ன மாயன் கலாராணி சிவராஜா மாசாணி ராஜா கங்கேஸ்வரி சௌந்தரபாண்டியன் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Leave your comments here...