திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மீண்டும் தங்கரதம்.!

ஆன்மிகம்தமிழகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மீண்டும் தங்கரதம்.!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மீண்டும் தங்கரதம்.!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் மீண்டும் தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒரு ஆண்டாக ஓடாத தங்கத்தேர் தை அமாவாசையான இன்று திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்தது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில். இக்கோயில் திருவாட்சி மண்டபத்தை சுற்றி தங்கரதம் புறப்பாடு நடைபெற்றது. திருக்கோயில் உள்ள தங்க ரதம் இழுக்க ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடை உத்தரவிற்கு பின் தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன் அர்ச்சனை, பாலாபிஷேகம், பூ, மாலை சாத்தப்படி, சண்முகார்ச்சனை, உபய திருக்கல்யாணம் நடைபெற்றதது. இந்நிலையில் பிப்., 11 முதல் மீண்டும் தங்க ரதம் புறப்பாடு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட தங்க ரதம் பழுதுநீக்கி, சுவாமி இன்றி கடந்த வாரம் சோதனை ஒட்டமாக திருவாட்சி மண்டபத்தை வலம்வந்தது.

செய்தி: Ravi Chandran

Leave your comments here...