தூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீரில் இருந்து இயற்கை விவசாயம் செய்யும் புதிய முறை அறிமுகம் .!

இந்தியா

தூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீரில் இருந்து இயற்கை விவசாயம் செய்யும் புதிய முறை அறிமுகம் .!

தூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீரில் இருந்து இயற்கை விவசாயம் செய்யும் புதிய முறை அறிமுகம் .!

தூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீரில் இருந்து இயற்கை விவசாயம் செய்யும் புதிய முறையை சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

நீர்ப்பாசனம் மற்றும் வேளாண் பணிகளுக்காக கழிவு நீரைப் பயன்படுத்தும் முதல் கழிவு நீர் தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பத்தை சிஎஸ்ஐஆர்-மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், துர்காப்பூர் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘அக்வா ரீஜிக்’ என்னும் பெயரிலான இந்த அமைப்பை சிஎஸ்ஐஆர்-மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிராணி, கூடுதல் மாவட்ட நீதிபதி திரு சுபேந்து பாசு மற்றும் இதர அலுவலர்களின் முன்னிலையில் மேற்கு வங்கத்தின் துர்காப்பூரில் உள்ள சிஎஸ்ஐஆர்-மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவன காலனியில் தொடங்கி வைத்தார்.

தொடக்கவுரை ஆற்றிய பேராசிரியர் ஹிரானி, கரியமில வாயு, கழிவு நீர் கால்வாய்கள் அடிக்கடி அடைத்துக் கொள்ளுதல் மற்றும் கழிவு நீர் வெளியேற்றம் ஆகியவற்றுக்கான தீர்வை அவர் கண்டுபிடிக்க விரும்பியதாக கூறினார். கொரோனா வைரஸ் 34 நாட்கள் வரை கழிவு நீரில் உயிர்வாழும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் மனதில் வைத்து இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கழிவு நீரை ஆறு கட்டங்களாக தூய்மைப்படுத்தும் இந்த முறை மூலம் நான்கு ஏக்கர்கள் விளைநிலங்களுக்கு தேவையான 24,000 லிட்டர்கள் தண்ணீரை சுத்தப்படுத்தலாம். இதன் சுத்திகரிப்பு உபகரணம் உள்ளூரிலேயே கிடைக்கும். தூய்மைப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு குடிக்கவும் இந்த தண்ணீரை உபயோகப்படுத்தலாம்.

Leave your comments here...