இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.!

இந்தியா

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.!

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அலங்கார மீன் வளர்ப்பு முனையம் அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்க படும் என மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டிய பிறகு மத்திய அமைச்சர் பேசுகையில்:- அலங்கார மீன்வளர்ப்பு துறையில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு இருப்பதாகவும், தமிழகத்தில் அலங்கார மீன் வளர்ப்பு வாய்ப்புகளை பயன்படுத்தி மீனவ மக்கள் தங்களது பொருளாதார நிலைமையை உயர்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.மத்திய, மாநில அரசுகள் இணைந்து அலங்கார மீன்வளர்ப்பு முனையம் திட்டத்தை செயல்படுத்தும் என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், படப்பையில் அமைய உள்ள நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் ஒரு ஆண்டுக்குள் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மேலும், நரேந்திர மோடி அரசு பதவியேற்றது முதல் மீன்வளத் துறைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. 1947 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மீன்வள துறைக்கு 3780 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மோடி அரசு பதவியேற்ற பிறகு, கடந்த 6 ஆண்டுகளில், 27 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.கடல் பாசி வளப்புக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். இதை மகளிர் மட்டுமல்லாது அனைவரும் பயன்படுத்தி வளம் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.கரையில் இருந்து 1 கிமீ. தூரத்தில் கடலில் கூண்டுக்குள் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு மீனவர்களுக்கு உதவும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரூ. 1 லட்சம் வரை மாத வருமானம் கிடைக்கும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலர் ராஜீவ் ரஞ்சன், தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை செயலர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள, நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்தும் மையத்தை மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து சென்னை முட்டுகாட்டிலுள்ள ICAR – CIBA (Central Institute of Brackishwater Aquaculture) நிறுவனத்தில் நடந்துவரும் பல்வேறு ஆய்வு பணிகளை நேரில் பார்வையிட்டார். அங்குள்ள மூத்த அதிகாரிகள் உடன் இந்நிறுவனத்தின் பணிகள் மற்றும் விரிவாக்கம் குறித்து ஆலோசித்தார்.


தொடர்ந்து சென்னை மாதவரத்தில் உள்ள மீன்கள் வளர்ப்பு மையத்தை பார்வையிட்டார். பின்னர் மாதவரம் மத்திய பால் பண்ணைக்கு சென்ற அவர் ஆவின் தயாரிப்பு பொருட்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

Leave your comments here...